search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தகுதிநீக்க எம்எல்ஏக்கள்"

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார். #Thangatamilselvan #Byelection
    சென்னை:

    தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை சட்டத்தை தவறாக பயன்படுத்தி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    பலப்பரீட்சை நடந்தபோது நாங்கள் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சட்டசபையில் ஓட்டு போடவில்லை. ஆதரித்து தான் ஓட்டு போட்டோம்.



    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர். இது நாடறிந்த உண்மை.

    ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எங்கள் 18 பேர் மீது மட்டும் சபாநாயகர் நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ. பதவியை பறித்துள்ளார்.

    இதை எதிர்த்து தான் நாங்கள் ஐகோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வந்துள்ளதால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய இருக்கிறோம். அங்கு எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம்.

    துணைப் பொதுச் செயலாளர் இடைத்தேர்தலை சந்திப்போம் என்று கூறி இருக்கிறார். தேர்தலை சந்திக்க நாங்களும் தயாராகவே இருக்கிறோம்.

    ஆனாலும் சபாநாயகரின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது. அவர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பதை வெளிப்படுத்தவே கோர்ட்டுக்கு செல்கிறோம்.

    நாங்கள் அப்பீலுக்கு சென்றால் அதை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளி வைப்பதாக இருந்தால் அந்த சமயத்தில் அப்பீல் மனுவை வாபஸ் பெற்று விடுவோம்.

    எனவே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thangatamilselvan  #Byelection


    தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை பலிகடா ஆக்கிவிட்டு இரட்டை குதிரையில் தினகரன் சவாரி செய்வதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார். #RBUdayakumar #TTVDhinakaran
    மதுரை:

    மதுரையில் இன்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைக்கு தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத சம்பவமாக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பலிகடா ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் டி.டி.வி. தினகரன் என்ற தனி மனிதனின் பதவி ஆசையும், சுயநலமும் தான்.

    ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று விட்டோம் என்ற ஆணவத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார்.

    அறந்தாங்கி தொகுதியில் திருநாவுக்கரசரும், சேலத்தில் செம்மலையும் சுயேட்சையாக வெற்றி பெற்றிருக்கிறார்கள். அப்படி சுயேட்சையாக வெற்றி பெற்று விட்டால் யாரும் தலைவராக வந்து விட முடியாது.

    ஏதோ ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக தினகரன் நினைத்துக் கொண்டு தலைக்கனம் பிடித்து அலைகிறார்.

    அவருக்கு கட்சி இல்லை. கொள்கை இல்லை, லட்சியம் இல்லை, நிரந்தர சின்னம் இல்லை. அவரது இயக்கம் தேர்தல் கமி‌ஷனில் பதிவு செய்யப்படக்கூடவில்லை. மக்கள் செல்வாக்கும், தொண்டர்கள் செல்வாக்கும் அவருக்கு கிடையாது.

    டி.டி.வி.தினகரன் போன்ற தனி நபரை முன்னிலைப்படுத்தி அரசியல் களேபரம் நடந்து கொண்டிருக்கிறது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு இறைவன் வழங்கிய வரலாற்று தீர்ப்பு.

    கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை போல் தன்னை சுற்றியுள்ளவர்களை திருப்திபடுத்துவதற்காக மேல்முறையீடு என்கிறார். தேர்தலை சந்திப்போம் என்கிறார்.



    இப்படி இரட்டை குதிரையில் சவாரி செய்வதற்கு தினகரன் நினைப்பது இதுவரை தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தது இல்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிர் தியாகத்தால் வந்த பதவிகளை இழந்துவிட்டு இன்றைக்கு சுயநலத்தின் பிடியில் எனது சகோதரர்கள் மனம் விம்மிக் கொண்டிருக்கிறார்கள். சேராத இடத்தில் சேர்ந்து இழக்கக்கூடாததை இழந்து நிற்கிறார்கள்.

    தினகரனின் முகம் களையிழந்து விட்டது. தடுமாறி நிற்கிறது. ஜெயலலிதாவுக்கு ராஜ துரோகம் செய்தவர் தினகரன்.

    கடைசி வரை ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர். எனவே அவரை நம்பி செல்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #RBUdayakumar #TTVDhinakaran

    ×